கோடி விழி போதாது தங்க மயிலே!
குமரி இயற்கையை ரசித்திடவே தங்க மயிலே!
தேடி வரும் தென்றலுடன் தெம்மாங்கு இசையதுவும்
பாடி வரும் புள்ளினமே தங்க மயிலே!-நல்
பண்பாடிக் களித்திருக்கும் தங்க மயிலே!
கோடி விழி போதாது தங்க மயிலே!
குமரி இயற்கையை ரசித்திடவே தங்க மயிலே!
பசுமை நிறை மலைகள் தங்க மயிலே!
பாங்குடன் செழித்திருக்கும் தங்க மயிலே!
பாரினில் வளம் கொழிக்க தங்க மயிலே!
மாரியை வழங்கி நிற்கும் தங்க மயிலே!
கோடி விழி போதாது தங்க மயிலே!
குமரி இயற்கையை ரசித்திடவே தங்க மயிலே!
வன உயிர் நிறைந்திருக்கும் வண்ண மலர் முகிழ்த்திருக்கும்
மனம் கவர் வனமதுவே தங்க மயிலே!-பெரும்
மகிமைகள் புரிந்திடுதே தங்க மயிலே!
கோடி விழி போதாது தங்க மயிலே!
குமரி இயற்கையை ரசித்திடவே தங்க மயிலே!
(ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே-பாடல் மெட்டு)

Leave a Reply