காலையில் கதிரவன் ஒளியினை நான் கண்டேன்!
கடல் அலைமீது ஆதவன் எழக் கண்டேன்!
கருணையின் வடிவாம் ஞாயிறை நான் கண்டேன்!
களிப்பதும் மேவிட மகிழ்ந்திடும் உயிர் கண்டேன்!
பனியதும் விலகிட பரவச நிலையினில்
உளமது உவந்திடும் உயிர் கண்டேன்!
நனிமிகு மாந்தர் கனிவுடன் தொழுதிட
நலமதும் மேவிடும் நிலை கண்டேன்!
புவியினில் பசுமை படர்ந்திட எங்கும்
பொலிந்திடும் இதமிகு வளம் கண்டேன்!
பொழிந்திட நலமே நிகழ்ந்திட நிதமே
புதுமைகள் விளைந்திடும் நிலம் கண்டேன்!
மாலையில் மயங்கிடும் சூரியன் ஒளி கண்டேன்!
மனமதைக் கவர்ந்திடும் பலநிறம் அதில் கண்டேன்!
மன்பதை உயிர்கள் உவந்திடும் உளம் கண்டேன்!
மறைந்திட ஒளியே இருளதும் வரக் கண்டேன்!
(ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்-பாடல் மெட்டு)

Leave a Reply