இயற்கையின் இசையினுக்கு இசைந்திட நலம் மேவும்!
இகபர சுகம் மேவும்! இனியவையே மேவும்!
வீசிடும் காற்றே நல் வேய்ங்குழல் இசையாகும்!
விரலதும் மீட்டிட வீணையும் இசைபாடும்!
மனமது மகிழ்வெய்த உளமதில் இசை ஊறும்!
மங்களம் நிறைந்திடவே பொங்கிடும் இசைநாதம்!
கனவது நனவாக களித்திடுமே இசையே!
காதலும் கைகூட கண்களும் கவிபாடும்!
மழையது மண்வீழ இசையதும் உருவாகும்!
மலர் அணை வண்டினமே ரீங்கார இசைமீட்டும்!
மாமழை அதுவாலே ஊற்றதும் இசைகூட்டும்!
மாங்குயில் ஓசையுமே மனமதை இசைவாக்கும்!
தெள்ளு தமிழ் மொழியே தேனிசையே இசைக்கும்!
தென்றலும் இசைபாட தேசமெல்லாம் களிக்கும்!
கானிடை மரங்களுமே கனிவாய் இசைமீட்டும்!
கடலின் அலைகளுமே கானமதே கூட்டும்!

Leave a Reply