கண்கோடி வேண்டுமடி கானமயிலே! -அழகு

கானகத்தை ரசித்திடவே கானமயிலே!

கனிகள் நிறைமரங்கள்!

களித்திடும் உயிரினங்கள்!

கண்டவர் கண்மயங்கும் கானமயிலே!

தென்றல் தவழ்ந்திருக்கும்

தேனாறு பாய்ந்திருக்கும்

தென்பொதிகை சந்தனமே கானமயிலே! -அரிய

திரவியமே தந்திடுமே கானமயிலே!

அருவி சலசலக்கும்

ஆற்றோரம் செழித்திருக்கும்

ஆனந்தத் தாண்டவமே கானமயிலே! -அங்கே

அமுதே பொழிந்திருக்கும் கானமயிலே!

பசுந்தளிர் செடி கொடிகள்

பாடிடும் புள்ளினங்கள்

பார்வையில் ஈர்த்திடுமே கானமயிலே! -எங்கும்

பசுமையதே பாய்விரிக்கும் கானமயிலே!

உலகினர் உய்த்திடவே

உயிர்நீர் உவந்திடுமே!

உணவும் உடைவழங்கும் கானமயிலே! -மனிதர்க்கு

உறையுளும் மருந்தாகும் கானமயிலே!

(ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே! -பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *