கானிலே வளர்ந்திருக்கும் கருணை நிறைமரங்கள்!
கடவுள் நமக்களித்த கனிவு மிகுமரங்கள்!
வானிலே மிதந்து வரும் மேகம் அதைஈர்த்து
வளமது மிகுந்திடவே பொழிந்திடும் பொன்மழையே!
மரங்கள் மண்மாதா மனம் கவர் செல்வமன்றோ!
மண்ணில் அதுகாக்க நிகழ்ந்திடும் நன்மை அன்றோ!
உயிர்வளி அதனோடு உணவதும் தான் வழங்கி
உலகுயிர் காத்துநிற்கும் உயர்ந்தவர் தருக்களன்றோ!
உருவம் பலவாகி உன்னத வடிவாகி
உலகைப் புறந்திருக்கும் உத்தம உயிர் மரமே!
மரம் செடி கொடி என்று மண்ணிலே பரந்தெங்கும்
மாட்சிமை மிகுந்திலங்கும் மாதவம் நிறை வனமே!
பூமியெங்கும் பூப்பூவாய் பூத்திருக்கும் தாவரமே!
பொங்கிடும் வளமையதால் பொலிந்திடுமே நலமே!
புவியின் நலமதையே காத்திடும் தருக்களதே!
பொன்போல அதைக்காக்க புரிந்திடும் நல்வரமே!

Leave a Reply