ஒன்று நமது பூமியே!
ஒன்று நமது வாழ்க்கையே!
ஒற்றுமையாய் வாழ்ந்திடில்
உயர்வை நாமும் எய்தலாம்!
நன்று நன்று நன்றென!
நல்லவையே செய்திட!
நானிலத்தின் மீதிலே!
நாளும் நேரும் நன்மையே!
இன்றிருப்பார் நாளையே!
இல்லையென்ற போதிலே!
இனியவையே நேர்ந்திட!
இம்மை என்றும் இன்பமே!
வென்றிடுவோம் சாதனை!
வீணர்தம்மை வீழ்த்தியே!
சென்று சேரும் இடமெலாம்!
செய்திடுவோம் சாதனை!
தேடல் என்றும் தொடர்ந்திட!
நாடி ஓடும் தீமையே!
நாடும் நாமும் நலம்பெற!
நாற்றிசையும் பரவுவோம்!
என்றுமில்லை சோகமே!
எதிலுமில்லை தோல்வியே!
ஏற்றிடுவோம் தீபமே!
ஏழையர்தம் வாழ்விலே!
பொதுமை எண்ணம் போற்றிட!
பொங்கிடுமே இன்பமே!
வெறுமையதும் நீங்கிட
வீதியெங்கும் ஆனந்தம்!
அல்லவைகள் மறைந்திட!
அன்பு எங்கும் நிலவிட!
வல்லமையே பெருகிட!
வையம் எங்கும் வளமையே!

Leave a Reply