தென்றல் தவழ்ந்துவரும் தேனருவிக் கரையோரம்!
தெம்மாங்கு பாடிவரும் தெற்குமலை அடிவாரம்!
பொங்கிவரும் அருவியதும் புனைந்திடும் மணியாரம்!
புல்லாங்குழல் இசையோ சேர்த்திடும் புதுராகம்!
மழைமுகில் மரம்ஈர்க்க மழைஅதும் பொழிவாகும்!
மழைநீர் வனம்தேக்க அருவிகள் உருவாகும்!
மண்மீது நீர்பரவ மாநிலம் செழிப்பாகும்!
மக்கள் மனம்குளிர மழையதும் உருவாகும்!
காட்டில் மரம்செடிகள் கைகோர்த்து வாழுதம்மா!
கருணை உள்ளமதை மண்ணுயிர் வாழ்த்துதம்மா!
இயற்கை அன்னைஅவள் தாய்மையைப் போற்றிடுவோம்!
எந்நாளும் இயற்கையதன் தலைமை ஏற்றிடுவோம்!
பூமியில் மூன்றுபங்கு நீரால் நிறையுதம்மா!
பொன்னேர் உழுதிடவே நெல்மணியும் விளையுதம்மா!
சாமியெனத் தொழவே சங்கடங்கள் தீருதம்மா!
சத்தியம் துணைவரவே நிம்மதி நிலவுதம்மா!

Leave a Reply