கண்ணில் கருணை வரும்!

கனிந்திடவே உளம் உருகும்!

மண்ணில் பொன் விளையும்!

மங்கலமே நிறைந்திலங்கும்!

எங்கள் பூமியிது ஏர்த்தொழிலால் சீர்பெருகும்!

இன்பம் பொங்கிடுமே நாளுமே!-அதை

இதயம் தனில் உவந்து வணங்குவோம்!

முல்லை மலர் மலரும்!

முப்போகம் நெல் வளரும்!

முகிலும் மழை சொரியும்!

முகமதுவே நகை புரியும்!

பொங்கும் பூமியிது பொன்விளைத்து நலம்பயக்கும்!

பொழியும் நன்மை அதே நாளுமே!-அதைப்

போற்றி மனம் உருகி வணங்குவோம்!

தென்றல் தூது விடும்!

தெம்மாங்கு இசை பயிலும்!

தேகம் உடல் நனையும்!

தேன்சிட்டு துணை இணையும்!

செழித்திடும் பூமியிது செந்நெல்லால் வளம்குவிக்கும்!

சிறந்தே திகழ்ந்திடுமே நாளுமே!-அதை

சிந்தையிலே தாங்கி தினம் வணங்குவோம்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *