ஏரின் முனையைப் பேனாவாக்கி
ஈரமண்ணைக் காகிதமாக்கி
உழவர் எழுதும் அழகிய மொழியே!
வறுமை ஓடும் பின்புற வழியே!
உழுது மண்ணைப் பண்படுத்த
உறையும் புழுவும் பூச்சிகளும்
பறவைக்கங்கே உணவாகும்!
பாடும் ராகம் நமதாகும்!
விதையை மண்ணில் விதைத்த பின்னே
விதைக்குத் தண்ணீர் உணவூட்ட
இலைகள் அசைந்து செடி வளரும்!
இனிய சூழல் உருவாகும்!
பூத்து சிரிக்கும் நெல்மணிகள்!
புலரும் ஆங்கே நல் அரிசி!
மனிதர்க்கிங்கே உணவாகும்!
மலரும் ஆங்கே புது உறவு!
நெல்லின் உமியே உணவாக!
நிதமும் உழைக்கும் மாடுகளே!
உணவை ஊட்டி உயிர்காக்கும்
உயர்ந்த தொழிலே உழவாகும்!

Leave a Reply