உழவதுவே உலகமிதில் உயர் தொழிலாகும்!-இந்த

உண்மையினை உணர்ந்திடவே வளம் நமதாகும்!

விளைந்திடவே நெல்மணியும் வயலதன் மேலே!-எங்கும்

விளங்கிடுமே இன்பமதே புவியில் எந்நாளும்! (உழவதுவே)

மாரியதன் கொடையதுவால் மண் வளமாகும்!-உழும்

ஏரதனின் வளமையதால் பயிர் உருவாகும்!

மழை வெயிலில் உழைப்பதனால் மணியதுவாகும்!-தன்

மானமிகு உழவரதால் நலமது மேவும்! (உழவதுவே)

மண் அதிலே வியர்வை விழ பொன் அதுவாகும்!-இந்த

மாநிலமே உயிர்த்திடவே உணவது ஈனும்!

கண் எனவே உழுதுநிலத்தைக் காத்திட நாளும்-நல்

கதி அருளும் மண் மாதா பூமியின் மேலே! (உழவதுவே)

(ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *