சோலை மலரொன்று எனைக்கண்டு சிரிக்கும்!
சோகம் பரவாத மனம் ஒன்று நினைக்கும்!
வாழும் நாள் என்னை வரவேற்கத் துடிக்கும்!
வைகைக் கரையோரம் தரு ஒன்று முளைக்கும்! (சோலை)
மாலை எந்நாளும் மயங்காது இங்கே!
மானும் இருள் கண்டு கலங்காது இங்கே!
நாளும் நல்லோர்கள் தான் இங்கு வருவர்!
நாளை நமதென்று நன்றே செய்திடுவர்! (சோலை)
பாடும் பூபாளம் பாரெங்கும் ஒலிக்கும்!
ஓடும் நதியெங்கும் என் கானம் இசைக்கும்!
காடும் மலை மண்ணும் வான் உள்ள வரைக்கும்
ஞாலம் எனைப்பாட நான் இங்கு இருப்பேன்! (சோலை)

Leave a Reply