இயற்கை அன்னையின் எழில் கோலம்! -அதன்
இயல்பால் இயங்கிடுமே ஞாலம்!
செயற்கையதால் வரும் அலங்கோலம்! -அதை
சிந்தையில் கொள்வதுவே ஞானம்!
பூமியில் வாழ்வது பெரும் பேறே! -இதைப்
புரிந்திட நேர்ந்திடும் மிகுசீரே!
சாமியை வேண்டிட நலமாகும்! -வரும்
சஞ்சலம் தீர்ந்திட மகிழ்வாகும்!
இயற்கையைப் பேணிட இனிதாகும்! -அதில்
இன்பம் அதுவே உருவாகும்!
இம்மை வாழ்வினில் வளம்மேவ! -எங்கும்
இயைதல் நேர்ந்திட இருள் போகும்!
இயற்கையின் மகிமை அறியாமல்! -வரும்
இன்னல் எதுவும் புரியாமல்!
இழிமன மாந்தரின் செயலதுவால்-இங்கு
இடருறும் மாந்தரின் துயர் களைவோம்!
முன்னோர் யாரும் மூடரல்ல! -அவர்
முற்றும் உணர்ந்த ஞானியன்றோ!
பின்னோர் செய்த பெருந்தவறால்-இன்று
பேரிடர் நேர்ந்திடும் நிலையன்றோ!

Leave a Reply