மஞ்சள் வண்ண மழைத்துளியாய்
மண்மீது பொழிந்திருக்கும்
வேங்கைமர மலர்களதன்
விஞ்சிநிற்கும் அழகு என்னே!
மேகமது சூழ்ந்திடவே
தேகமதும் குளிர்ந்துவிடும்!
மேதினியும் செழிப்புறவே
மேன்மையது நிறைந்துவிடும்!
தென்றலது தவழ்ந்துவந்து
தெம்மாங்கு இசைத்திடவே
தேனிசை செவிகளிலே
தீஞ்சுவையைச் சேர்த்துவிடும்!
வான்மழையும் வருகைதர
வையமிதில் வளம்பெருகும்!
வாடிநிற்கும் உயிர்களதன்
வாட்டமது மறைந்துவிடும்!
பாடிவரும் பூங்குயிலும்
பச்சைவண்ண மரங்களுமே
இச்சைகொள்ளத் தூண்டுதம்மா!
இயற்கையதன் மகிமை என்னே!

Leave a Reply