மழைத்துளியே மண்ணில் பொழிந்திடவே அதனால்
விளைத்திடுமே வளமே! விளங்கிடுமே நலமே!
தழைத்திட செடிகொடிகள் தரணியிலே செழித்தே
தந்திடும் நற்கதியே! தாங்கிடுமே நமையே!
உயிர் நீர் அதுவாகி உயிர்களைக் காத்திடவே
உலகம் மகிழ்ந்திடுமே! உன்னதம் நிகழ்ந்திடுமே!
அமிழ்தினும் மேலான அருமருந்தாம் நீராய்
அவனியைக் காத்திடவே அற்புதம் நேர்ந்திடுமே!
தண்ணீர் அதன் அருமை தான்அதும் தெரியாமல்
தருக்கிடும் தறுதலைகள் தரணியில் வாழ்கின்றார்!
கண்ணீர் அதுதானே கடைசியில் துணை வருமே!
கவனம் தடுமாறிக் கலக்கிடவே நீரை!

Leave a Reply